தென்காசி அருகே ஆசிட் குடித்து கூலித் தொழிலாளி பலி
ஆசிட் குடித்து கூலித் தொழிலாளி பலி;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் ஹனிபா வயது 38. இவருக்கு கூலித்தொழிலாளியான மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறபடுகிறது. இதனால் இவரது மனைவி குழந்தைகள் பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டு கழிவறையில் இருந்து ஆசிட் முகமது ஹனிபா குடித்ததாக சொல்லபடுகிறது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.