மாயனூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. இருவர் படுகாயம்.

மாயனூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. இருவர் படுகாயம்.;

Update: 2025-07-17 07:01 GMT
மாயனூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. இருவர் படுகாயம். திருச்சி மாவட்டம் , தொட்டியம் , சீல பிள்ளையார் புதூர் , கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன் வயது 22. அதே பகுதியைச் சேர்ந்த ராகவன் வயது 30. இவர்கள் இருவரும் ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருச்சி - கரூர் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தனர் இவர்கள் வாகனம் மாயனூர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடை அருகே சென்ற போது அதே சாலையில் கடலூர் மாவட்டம் , பண்ருட்டி , ரைஸ் மில் தெருவை சேர்ந்த இன்பராஜ் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் முத்துராமன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் முத்துராமன் மற்றும் ராகவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்ச சம்பவம் தொடர்பாக முத்துராமன் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரை வேகமாகவும்,அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இன்பராஜு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Similar News