உத்தமபாளையம் அருகே கா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துவனம் (70). இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பாத்ரூம் செல்லும்போது வழுக்கி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் (ஜூலை16) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உத்தம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.