தேனி நகர காவல் நிலைய காவல்துறையினர் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது தேனி புதிய பேருந்து நிலையம் அருகே ஜெயராமன் என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு பொது மக்களை ஆபாசமாக பேசி போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். காவல்துறையினர் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் ஜெயராமனை காவல்துறையினர் கைது செய்தனர்.