உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகன விபத்தில் வட மாநிலத்தவர் படுகாயம்
விபத்து;
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா சிங். இவர் உத்தமபாளையம் பகுதியில் வேலை பார்த்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சாலை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்