தேவதானப்பட்டி காவல்துறையினர் குற்றத் தடுப்பு சம்பந்தமாக கெங்குவார்பட்டி பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதிக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் சௌந்தரபாண்டியனை கைது செய்தனர்.