புலியூர் அருகே நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம்.

புலியூர் அருகே நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம்.;

Update: 2025-07-17 09:51 GMT
புலியூர் அருகே நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம். கரூர் மாவட்டம் புலியூர் அருகே காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி ராணி வயது 50. இவர் ஜூலை 15ஆம் தேதி இரவு 9 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் புலியூர் அருகே காளிபாளையம் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் தாலுக்கா , கட்டளை , அக்ரஹாரபுரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற ராணி மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் தலையில் பலத்த காயமடைந்த ராணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த ராணியின் மகன் பிரித்திவிராஜ் 32 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News