தாமிரபரணி நதியை பாதுகாக்ககோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பாக பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் இன்று (ஜூலை 17) மனு அளிக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், இயக்கங்கள்,விவசாய சங்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்று மனு அளித்தனர்.