உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;
உலக மக்கள் தொகை தினம் 2025-ஐ (சூலை11) முன்னிட்டு, மருத்துவம்-மக்கள் நல் வாழ்வுத்துறை, மாவட்ட குடும்பநலச் செயலகம் ஆகியவைகளின் சார்பில், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், இன்று (17.07.2025) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. உடன் மாவட்ட குடும்ப நல அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்