மீன் பிடிக்க குத்தகை பெற விண்ணப்பிக்கலாம்
கண்மாயில் மீன் பிடிக்க குத்தகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பாதரக்குடி, சங்காரபுரம், அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், கீழஊரணி மற்றும் செஞ்சை ஊரணி ஆகிய 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம். தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி-04575 240848 மின்னஞ்சல்- adisivaganga@gmail.com மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது