சங்கரன்கோவில் அருகே கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி;

Update: 2025-07-17 11:54 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (60)என்பவர் திருவேங்கடம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் இருந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News