சங்கரன்கோவில் நகராட்சித் தலைவி உமா மகேஸ்வரி பதவியிழந்தார்
நகராட்சித் தலைவி உமா மகேஸ்வரி பதவியிழந்தார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கடந்த முறை குரல் வாக்கெடுப்பின்படி நடைபெற்று. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இன்று 11 மணிக்கு நடைபெற இருந்த மறைமுக வாக்கெடுப்பானது 11:30 மணியாகியும் கோரமிருந்த போதும் வாக்கெடுப்பு நடைபெறாததால் ஆத்திரமடைந்த நகர்மன்ற தலைமை உமா மகேஸ்வரி மற்றும் அவருக்கு ஆதரவாக 17 ஆவது வார்டு உறுப்பினர் விஜயகுமார் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு. வாக்குப்பெட்டியை கீழே தள்ளியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி மற்றும் 17வது வார்டு உறுப்பினர் விஜயகுமார் நகர்மன்ற ஆணையாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி அவரை கண்டித்து வாக்கெடுப்பை புறக்கணித்து நகராட்சியை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து கவுன்சிலர்கள் மறைமுக வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நிலையில் இதில் 28 வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பதிவான வாக்குகளை ஆணையர் மற்றும் அதிகாரிகள் எண்ணி முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.