காந்தி நகரில்- மூளையில் ரத்தக் கசிவு - உறங்கும் போதே வாலிபர்உயிரிழப்பு.
காந்தி நகரில்- மூளையில் ரத்தக் கசிவு - உறங்கும் போதே வாலிபர்உயிரிழப்பு.;
காந்தி நகரில்- மூளையில் ரத்தக் கசிவு - உறங்கும் போதே வாலிபர்உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா வேலாயுதம்பாளையம் விஆர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் வயது 39. ஜூலை 14ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை . இதனால் அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். பிறகு அவரை பரிசோதித்து ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர். அப்போது அவரது மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சய் குமாரின் மனைவி சிவரஞ்சனி வயது 38 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சஞ்சய் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.