திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல் குளத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூலை 17) மர்ம நபர்கள் எட்டு சிலைகளை திருடி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பேட்டை காவல் நிலையத்தில் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தனர்.