சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பகுளம் பஞ்சாயத்து உட்பட்ட நேதாஜி நகரில் அமைந்துள்ளது.அப்போது அந்தப் பகுதி தெருக்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், அந்தப் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை என உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் இன்று காலையில் முற்றுகையிட்டனர் . இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.