வைரமடை -காரை வேகமாக இயக்கியதால் சென்ற மீடியனில் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.

வைரமடை -காரை வேகமாக இயக்கியதால் சென்ற மீடியனில் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.;

Update: 2025-07-18 08:11 GMT
வைரமடை -காரை வேகமாக இயக்கியதால் சென்ற மீடியனில் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு. திருப்பூர் மாவட்டம் , காங்கேயம் அருகே மேட்டுப்பாளையம் சடையப்பா நகரை சேர்ந்தவர் சக்திவேல் வயது 44. இவரது மனைவி லலிதா வயது 33. இருவரும் ஜூலை 16 இரவு 7:30 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் அவர்களது காரில் சென்றனர். இவரது கார் தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட வைரமடை அருகே வந்த போது காரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சக்திவேல் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து லலிதா அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சக்திவேல் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.

Similar News