சின்னதாராபுரம் - கோவில் விவகாரம் - பொதுமக்கள் போலீசார் தள்ளுமுள்ளு.

சின்னதாராபுரம் - கோவில் விவகாரம் - பொதுமக்கள் போலீசார் தள்ளுமுள்ளு.;

Update: 2025-07-18 08:48 GMT
சின்னதாராபுரம் - கோவில் விவகாரம் - பொதுமக்கள் போலீசார் தள்ளுமுள்ளு. கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2018 கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு தரப்பினரையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று முன் தினம் அறநிலையத்துறை சார்பில் கோவில் முன் ஜாதி வேறுபாடு இன்றி அனைத்து சமூகத்தினரும் கோவிலில் வழிபடலாம் வழிபாடு செய்ய வரும் பக்தர்களை தடுப்போர் மீது குற்றவியல் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதனால் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர்பிளக்ஸ் பேனரை அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கோவில் திறக்க கூடாது என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்ட து. இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நான்கு பெண்களை 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Similar News