நெல்லை மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கேடிசி நகர் 7வது தெருவில் இருந்து தூத்துக்குடி சாலைக்கு செல்லும் தெருக்களில் சாலைகள் மிகவும் சிதலமடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக இப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டுகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி செல்கின்றனர். இதனால் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருவதால் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.