சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி மாணவா்கள் கபடியில் சாதனை
அரசுப் பள்ளி மாணவா்கள் கபடியில் சாதனை;
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வட்டார அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். கடையநல்லூா் வட்டார அளவிலான போட்டியில் இந்தப் பள்ளியின் மேல்நிலை வகுப்பு மாணவிகள் 19 வயதுக்குள்பட்டோா் போட்டியில் முதலிடம் பெற்றனா். 17 மற்றும் 14 வயதுக்கு கீழ் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 2ஆவது இடம் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஆகியோா் பாராட்டினா்.