கடையநல்லூரில் உள்ள பகுதிகளில் நாளை மின்தடை
கடையநல்லூர் பகுதிகளில் மின்தடை;
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டாரத்தில் நாளை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.