பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்காசி மாவட்டம் விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் இருக்காது. அதன்படி சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.