சுக்காலியூர் பாலத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால் விபரீதம்.
சுக்காலியூர் பாலத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால் விபரீதம்.;
சுக்காலியூர் பாலத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால் விபரீதம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மகன் சுரேஷ் வயது 29. இவர் ஜூலை 16ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் கரூர் - மதுரை சாலையில் அவரது டூவீலரில் சென்றார் . இவரது வாகனம் சுக்காலியூர் அமராவதி ஆற்று பாலத்தில் செல்லும்போது , அதே சாலையில் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி ,அருகே தருணகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் வயது 41 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிப்பர் லாரி சுரேஷ் ஓட்டிச் சென்ற டூவீலரை முந்தி சென்றது. அப்போது லாரி டிரைவர் ராஜேஷ் எவ்வித சிக்னாலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த சுரேஷின் டூவீலர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் அறிந்த சுரேஷின் தந்தை பாலசுப்பிரமணியம் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து ஏற்படும் வகையில் லாரியை ஓட்டிய ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர் தாந்தோணி மலை காவல்துறையினர்