ஓசூர்: டிராகன் ஃப்ரூட் அறுவடை தீவிரம்
ஓசூர்: டிராகன் ஃப்ரூட் அறுவடை தீவிரம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள அடகுறிக்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கர் கணக்கில் டிராகன் ஃப்ரூட் செடிகளை வைத்து விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளது. இங்கு விளையும் டிராகன் ஃப்ரூட் பழங்களை வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.