விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு

மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு;

Update: 2025-07-18 16:21 GMT
விழுப்புரம் அருகே பெருங்கலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி அஞ்சலை,51; இவர் நேற்று தனது மகள்கள் மற்றும் உறவினர்களோடு எஸ்.பி., அலுவலகத் தில் மனு அளிக்க வந்தார்.அப்போது, மண்ணெண்ணெயை தனது உடல் மீது ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அந்த கேனை பிடுங்கியதோடு, புகார் தொடர்பாக மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, அஞ்சலை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த 30 ஆண்டுகளாக பெருங்கலாம்பூண்டி கிராமத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். இந்த இடம் தொடர்பான பிரச்னையில், எங்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கஞ்சனுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News