தேய்பிறை அஷ்டமி பூஜை

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை;

Update: 2025-07-18 19:09 GMT
சிவன் கோவில்களில் தான் பைரவர் வழிபாடு என்பது இருக்கும் ஆனால் திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அம்சமாக சொர்ண ஆகர்சன பைரவர் வழிபாடு இங்கு பிரசித்தி பெற்றதாகும். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சொர்ண ஆகர்சன பைரவருக்கு 2 நாட்கள் இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது. திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

Similar News