கல்லூக்குறிக்கியில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவர் கோவில் சிறப்பு வழிபாடு
கல்லூக்குறிக்கியில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவர் கோவில் சிறப்பு வழிபாடு;
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கி பெரியஏரி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை கணபதி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம் உள்ளிட்ட பல ஏகங்கள் நடந்தது. இதை தொடர்ந்து காலபைரவருக்கு அபிஷேகம், மகாதீபாராதனை கான்பிக்கபட்டது. மேலும் தங்ககவசத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெடர்ந்து பகல் 12 மணிக்கு பரணி தீபம் ஏற்றபட்டது. பின்னர் பூசணி, தேங்காய் மற்றும் அகலில் விளக்கேற்றி பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவமி தரிசனம் செய்தனர்.