களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயலக கூட்டம்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயலக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.