கீரனூர், உடையாவயலை சேர்ந்த ஆரோக்கியசாமி (70), சவரியம்மாள் (62) ஆகிய இருவரும் பைக்கில் உடையாவயலில் இருந்து கீரனூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கீரனூர் கிளை சாலையில் அவர்களுக்கு பின்னால் பைக்கில் ஓட்டி வந்த வீரலெக்ஷ்மி மோதியதில் இருவரும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரில் வீரலெக்ஷ்யை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.