இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
விபத்து செய்திகள்;
தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (44). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தஞ்சாவூரில் இருந்து ஆதனகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சோலங்கம்பட்டி அருகே இருசக்க வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வண்டியிலிருந்து தவறி விழுந்து உள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்