திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்;

Update: 2025-07-19 09:15 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட தலைமை நீதிபதியை பணி மாற்றம் செய்யக்கோரி நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை இன்று காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைமை நீதிபதி மீனா குமாரியை பணி மாற்றம் செய்யக்கோரி தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. செயலாளர் ஞானமோகன் முன்னிலை வகித்தார். இதில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளை தொடர்ந்து அவமரியாதை செய்து வரும் மாவட்ட நீதிபதியை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்வில் பொருளாளர் ராஜீவ்காந்தி, துணை தலைவர் முருகேசன், முன்னாள் தலைவர்கள் பாண்டியன், ரமேஷ், முன்னாள் செயலாளர் அன்பழகன் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் எழுத்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News