கரூர்-விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வந்த செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு.
கரூர்-விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வந்த செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு.;
கரூர்-விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வந்த செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு. கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அவருக்கு தடகள போட்டிகள் நடத்தும் வேலம்மாள் பள்ளி நிர்வாகம் சார்பில் பாண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பாராலிம்பக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் கௌரவ அழைப்பாளராக பங்கேற்றார். மேலும் வேலம்மாள் பள்ளியின் முதல்வர் ரகுநாதன் , நடுவர் மகேந்திரன் , போட்டியில் பங்கேற்கும் மாணவ - மாணவியர் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.