ஆம்பூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்து இறந்ததால்*
ஆம்பூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்து இறந்ததால்*;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்து இறந்ததால் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்.. வேலூர் மாவட்டம். குடியாத்தம், சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த முகமது வசீம் என்பவர் தனது மனைவி சீமா பர்வீன் நிறைமாத கர்ப்பணியாக இருந்த நிலையில் நேற்று அதிகாலை சீமா பர்வீனிற்கு பிரசவ வலி அதிகமாகவே அவரை அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் (ஜாமியா தருஸ்லம் மருத்துவமனை) அனுமதித்துள்ளனர், அப்பொழுது பிற்பகலில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், அதனை தொடர்ந்து மாலை ஆகியும் குழந்தை பிறக்காததால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிறக்க ஏற்பாடுகள் செய்வதாக மருத்துவர்கள் சீமா பர்வீனின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர், அதனை தொடர்ந்து சீமா பர்வீனுக்கு அறுவை சிகிச்சை செய்த போது, குழந்தை பிறந்து சற்று நேரத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த சீமா பர்வீனின் உறவினர்கள், சீமா பர்வீன் கர்ப்பம் தரித்த நாள் முதல் இநத மருத்துவமனையில் தான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், குழந்தை நன்றாக உள்ளது எனக்கூறி சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுவதாக கூறி ஆத்திரமடைந்த சீமா பர்வீனின் உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து, மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர், அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் சீமா பர்வீனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசி சீமா பர்வீனுக்கு அளித்த சிகிச்சை முறை குறித்து விசாரணை மேற்க்கொண்டு அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் சீமா பர்வீனின் உறவினர்கள் இறந்த குழந்தையை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..