செம்படம்பாளையம் -சர்க்கரை ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு.
செம்படம்பாளையம் -சர்க்கரை ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு.;
செம்படம்பாளையம் -சர்க்கரை ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுக்கா , தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 56. இவர் அருகில் உள்ள செம்படாம்பாளையத்தில் செயல்படும் இஐடி பாரி சர்க்கரை ஆலையில் கடந்த 12 வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜூலை 18-ஆம் தேதி மதியம் 12:30 மணி அளவில் பணியில் இருந்த போது சுப்பிரமணியன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியனின் மனைவி நிர்மலா வயது 54 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடத்திற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.