பள்ளபாளையத்தில் வயிற்று வலியால் மனநலம் பாதித்தவர் விஷம் குடித்து தற்கொலை.
பள்ளபாளையத்தில் வயிற்று வலியால் மனநலம் பாதித்தவர் விஷம் குடித்து தற்கொலை.;
பள்ளபாளையத்தில் வயிற்று வலியால் மனநலம் பாதித்தவர் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம் , தும்பிவாடி , பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 44. கடந்த 10- வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அண்மை காலமாக இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த ரமேஷ் பள்ளபாளையம் அருகே ஜூலை 17ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி சந்தியா வயது 32. தனது கணவனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி ஜூலை 18ஆம் தேதி உயிரிழந்தார். சம்பவம் குறித்து சந்தியா அளித்த புகாரில் உயிரிழந்த ரமேஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர் .