கரூர் துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

கரூர் துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.;

Update: 2025-07-19 13:04 GMT
கரூர் துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. வேலம்மாள் பள்ளி சார்பில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டம்மி துப்பாக்கியால் சுட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் வட்டு எறிதல் ஈட்டி எறிதல் உள்ளிட்ட 75 விதமான போட்டிகள் நடைபெற உள்ளது. சுமார் 13,000 பேர் பங்கேற்கும் இந்த போட்டியில் முதல் போட்டியாக ஓட்டப்பந்தய போட்டியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டம்மி துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற மாணாக்கர்கள் வெற்றி பெறும் முனைப்போடு ஒருவரை ஒருவர் போட்டி போட்டு முந்தி சென்ற காட்சி காண்போரை கவர்ந்தது.

Similar News