குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

அருவிகளில் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்;

Update: 2025-07-20 02:20 GMT
தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. பொதுவாக சீசன் காலங்களில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர்மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த 2 அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News