பொங்கலூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
பொங்கலூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அவனாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றார்;
பொங்கலூரை அடுத்த உகாயனூர் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 45). அவருடைய மகள் காயத்ரி (24). இவருக்கும், பழனியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காயத்ரி பழனியில் இருந்து தனது தந்தை வீடான பெரிய காட்டுப்பாளையத்தில் வந்து தங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது காயத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காயத்ரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் தற் கொலைக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.