குற்றாலத்தில் இன்று சாரல் திருவிழா தொடக்கம்

சாரல் திருவிழா தொடக்கம்;

Update: 2025-07-20 03:48 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. தொடக்க விழாவுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகிக்கிறாா். அரசு கூடுதல் தலைமை செயலா் (சுற்றுலா- பண்பாடு, அறநிலையங்கள் துறை) மணிவாசன், சுற்றுலா இயக்குநா்-தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக மேலாண்மை இயக்குநா் கிறிஸ்துராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் வரவேற்கிறாா். வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் விழாப் பேருரையாற்றுகிறாா். சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து, கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெறுகிறது. பின்னா், பரதம், ஜிக்காட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, கிராமியக் கலைநிகழ்ச்சி, கைச்சிலம்பாட்டம், கேரளக் கலைஞா்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Similar News