நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம்

நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமலக்ஷ்மி மஹாலில் கண் பரிசோதனை முகாம்;

Update: 2025-07-20 08:33 GMT
திண்டுக்கல் மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மேட்டுப்பட்டி, சந்தைரோடு ராமலக்ஷ்மி திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரமசிவம் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். மேலும் மாவட்டத் தலைவர் நவீன் குமார் மாவட்ட செயலாளர் சந்துரு மற்றும் மாவட்ட பொருளாளர் சூர்யா கெளதம் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Similar News