காயத்ரி நகரில் டூ வீலர் வேகமாக சென்று திடீரென பிரேக் இட்டதால் பெண் கீழே விழுந்து படுகாயம்.

காயத்ரி நகரில் டூ வீலர் வேகமாக சென்று திடீரென பிரேக் இட்டதால் பெண் கீழே விழுந்து படுகாயம்.;

Update: 2025-07-20 09:31 GMT
காயத்ரி நகரில் டூ வீலர் வேகமாக சென்று திடீரென பிரேக் இட்டதால் பெண் கீழே விழுந்து படுகாயம். கரூர் ஆண்டாங் கோயில் கிழக்கு , மருத்துவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி கண்ணம்மாள் வயது 55. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 18 என்பவரது எலக்ட்ரிக் டூவீலரில் ஜூலை 19ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் வேலுச்சாமி புறத்திலிருந்து காயத்ரி நகர் செல்லும் சாலையில் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே சென்றபோது டூவீலரை கண்ணன் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் அமர்ந்து வந்த கண்ணம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த கண்ணம்மாளின் மகள் கல்பனா வயது 26 அளித்த புகாரில் சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர் கரூர் நகர காவல் துறையினர்.

Similar News