கந்தம்பாளையத்தில் பணியின் போது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.

கந்தம்பாளையத்தில் பணியின் போது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-07-20 09:56 GMT
கந்தம்பாளையத்தில் பணியின் போது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா , பள்ள மருதப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அருகில் உள்ள கந்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே செயல்படும் தனியார் பஸ் பாடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 10 வருடங்களாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 19ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் , பஸ் பாடி நிறுவனத்தில் பணியாற்றும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முருகேசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உறவினர் லோகநாதன் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த முருகேசனின் உடலை அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Similar News