கோவில் செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை அமைச்சர் வெளியிடுவாரா? காடேஸ்வரா சுப்பிரமணியம் கரூரில் கேள்வி.
கோவில் செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை அமைச்சர் வெளியிடுவாரா? காடேஸ்வரா சுப்பிரமணியம் கரூரில் கேள்வி.;
கோவில் செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை அமைச்சர் வெளியிடுவாரா? காடேஸ்வரா சுப்பிரமணியம் கரூரில் கேள்வி. கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்து முன்னணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்- தமிழகத்தில் 2000 கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தியதாக கூறிவருகிறார் அறநிலையத்துறை துறை அமைச்சர். அண்மையில் திருச்செந்தூர் கோவிலுக்கு 400 கோடி செலவு செய்ததாகவும் கூறுகிறார்.இது தொடர்பாக கணக்கு வழக்கு பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கிறார். கோவில்களுக்கு ஆன்மீக பெரியவர்கள் , பொதுமக்கள் , தொழிலதிபர்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக சிவ நாடார் என்பவர் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்திற்குபெரிய தொகை அளித்திருக்கிறார். எனவே யார் யார் எவ்வளவு தொகை அளித்தார்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.