பெருமாள் பட்டி காலனியில் பணம் வைத்த சூதாடிய நான்கு பேர் கைது.
பெருமாள் பட்டி காலனியில் பணம் வைத்த சூதாடிய நான்கு பேர் கைது.;
பெருமாள் பட்டி காலனியில் பணம் வைத்த சூதாடிய நான்கு பேர் கைது. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட பெருமாள் பட்டி பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைக் கரசிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 19ம் தேதி மாலை 3 :45 மணி அளவில் பெருமாள் பட்டி காலணியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் பட்டியைச் சேர்ந்த சக்திவேல் , பால்வார்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் , கோடங்கிபட்டியைச் சேர்ந்த பொம்முராஜ்,கருப்பையா ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ரூபாயும் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கைமேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.