குமரி மாவட்டம் பைங்குளம் ஊராட்சிக்குட்டட்ட தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அலங்கார கற்கள் அமைக்க ரூ. 1.60 லட்சமும், ஜின்னா திடல் அலங்கார கற்கள் அமைக்க ரூ. 2.80 - லட்சமும், தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூட சாலை அலங்கார கற்கள் அமைக்க ரூ. 3.15 லட்சமும், புதுக்கடை காவல் நிலையத்திற்கு தெற்கு பக்கம் பண்டாரவிளை செல்லும் சாலை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 3. லட்சமும் என நான்கு பணிகளுக்கும் மொத்தம் 10.55 - லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. . இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, தேங்காப்பட்டணம் மண்டல தலைவர் அக்பர் அலி, முன்னாள் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஷேக், அருண், சமீர், ராஜன், பபின் போஸ், அகில் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.