இரு தரப்பினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஏ வெள்ளோடு பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒரு தரப்பினர் தேரை பூட்டை உடைத்து வெளியே சப்பரத்தை தள்ளியதால் இரு தரப்பினர் இடையே மோதல்: போலீசார் குவிப்பு: பரபரப்பு: தேவாலய சப்பாரங்களின் கிட்டங்கி சாவி காவல்துறையிடம் ஒப்படைப்பு;
திண்டுக்கல் மாவட்டம் ஏ. வெள்ளோடு கிறித்துவ மக்கள் புனித யாகப்பர், புனித தெரசா தேவாலயத்தில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும். 1500 தலைக்கட்டு உள்ள தரப்பினர், புனித அந்தோணியார் மன்றம் என்ற பெயரில் 25 பேர் ஒரு தரப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை ஊர் கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், மற்றொரு தரப்பினர் அம்மாங்க மடம் எதிரே உள்ள கோவில் சப்பரம் உள்ள கதவின் பூட்டை உடைத்து சப்பரத்தை வெளியே எடுத்துள்ளனர். அதைப் பார்த்த மற்றொரு தரப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகுதியில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெளியே இழுத்து வந்த தேரை நடுரோட்டில் வைத்து விட்டு இரு தரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமையில் காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வேறு பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க சப்பரங்களை தள்ளி புதிய பூட்டு போட்டு சாவி காவல் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இரு தரப்பினர்களுக்கு இடையே சமரச முயற்சி நடத்திய பின்பு திருவிழாவானது நடத்தப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.