இந்து நாடார்சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை

குமரி மாவட்டம்;

Update: 2025-07-20 13:18 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் உள்ள அய்யா வைகுண்டர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்து நாடார் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் 10 வகுப்பில் 450 மதிப்பெண் 12ம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் அதற்கும் மேல் பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசு தொகை, சாதனைகள் படைத்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர் குமரி மாவட்ட இந்து நாடார் சங்க N. காமராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். சி. பாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் காந்தி, குமரிமாவட்ட இந்து நாடார் சங்க செயற்குழு உறுப்பினர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை P. பாலகிருஷ்ணவேலையா தொகுத்து வழங்கினார்.

Similar News