தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு;

Update: 2025-07-20 13:49 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (21.07.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி புதுப்பட்டி, பாடியூர், கூட்டத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Similar News