காங்கேயத்தில் மனைவியை கத்தியால் தாக்கிய காவலாளி கைது

மனைவியை கத்தியால் தாக்கிய காவலாளி கைது காங்கேயம் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்;

Update: 2025-07-21 01:26 GMT
காங்கேயம் அய்யாசாமி நகர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). காவலாளி. இவரது மனைவி ராணி (45). கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று  தன் மகளின் வீட்டிற்கு ராணி வந்துள்ளார். அப்போது நாகராஜ் கத்தியால் ராணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராசை கைது செய்தனர்.

Similar News