தக்கோலத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு!
ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு!;
தக்கோலம் பஸ் நிலையம், பஜார், திருவலாங்காடு ரோடு, அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதி களில் நேற்று மாலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகேஷ் தலைமையிலான போலீசார்,வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, மோட்டார்சைக்கிளில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணிவது உங்கள் உரிமை மட்டுமல்ல, உங்கள் கடமையும் கூட. வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்து செல்ப வர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். பாட்டு கேட்டுக் கொண்டும், செல்போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.