மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

தக்கலை;

Update: 2025-07-21 12:50 GMT
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார். அவர் பேசுகையில்- கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த கல்வி ஆண்டிலும், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்டு, தேசிய முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பை பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை தங்களது பள்ளி பாடங்களின் ஊடே தொடர்ந்திடல் வேண்டும். எனபேசினார். நடைபெற்ற ஆய்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News